பதினேழு வார கர்ப்பிணி பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

பதினேழு வார கர்ப்பிணி பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது நாம் பார்க்கலாம்.

நீங்கள் பார்க்க போகும் விஷயங்கள்,

  1. பதினேழு வார குழந்தையின் வளர்ச்சி
  2. பதினேழு வாரங்களில் உங்களிடம் காணப்படும் அறிகுறிகள்
  3. பதினேழு வாரங்களில் உங்கள் உடலில் காணப்படும் மாற்றங்கள்
  4. பதினேழு வாரங்களில் நீங்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்
  5. பதினேழு வாரங்களில் நீங்கள் உண்ண வேண்டிய உணவுகள்
 
  • பதினேழு வார குழந்தையின் வளர்ச்சி

   

மனதை மயக்கும் இதயத்துடிப்பு!

நீங்கள் மட்டுமே எடை கூடி இருப்பதாக நினைப்பது முற்றிலும் தவறு. ஆம், உங்கள் குழந்தையிடமும் ‘காவி கொழுப்பு’ (அடிபோஸ் திசு) அவர்கள் உடம்பில் இவ்வாரங்களில் அதிகரித்து காணப்படுகிறது. இது தான் உங்கள் குழந்தையின் உடம்பில் சூட்டை உண்டாக்க காரணமாகவும் அமைகிறது. உங்கள் குழந்தையோ கட்டை விரலை வாயில் வைத்த வண்ணம் இந்த சமயத்தில் இருக்க செய்வான். அதாவது இது தான் தாய்ப்பால் தரக்கூடிய ஒரு அறிகுறியாக உங்களுக்கு அமைகிறது. அத்துடன் கருவிலிருக்கும் அவன் எப்படி மூச்சு விடுவது எனவும் கற்றுக்கொள்கிறான். உங்கள் குழந்தை இப்போது 5 இன்ச்-கள் பெரிதாகவும், 150 கிராம்கள் எடையுடனும் இருப்பர். இப்போது அவர்களை உங்கள் உள்ளங்கையில் அடக்கி விடும் அளவிற்கு தான் இருக்க செய்வர். அதேபோல் அவர்கள் இதயத்துடிப்பும் உங்கள் இதயத்துடிப்பை போல் இரு மடங்கு வேகமாக இருக்கவும் கூடும். இருப்பினும் அதனை கேட்கும்போது மனதை மயக்கும் இசையாக உங்களுக்கு தோன்ற செய்யும்.   இந்த பதினேழாவது வாரத்தில் எல்லா குழந்தைங்களுக்கும் மம்மரி சுரப்பி வளர்ச்சி அடைய, பெண் குழந்தையாக இருப்பின் ஆறு மில்லியன் முட்டைகள் வரை எடுத்து செல்லவும் செய்கிறது. அத்துடன் இந்த பதினேழாவது வாரங்களில் “மைலின்” எனப்படும் ஒன்று மெல்ல குழந்தையின் தண்டு வடத்தை சூழ்கிறது. இந்த மைலின் என்பது வெள்ளை மற்றும் கொழுப்பு நிறைந்ததாகும். இது குழந்தையின் மூளை தகவலை நரம்புக்கு பரிமாற உதவுகிறது.

பதினேழு வாரங்களில் உங்களிடம் காணப்படும் அறிகுறிகள்

17 Weeks Pregnant woman கனவுகள்: ஒரு வித மாயை அதனை கனவுகளில் கர்ப்பிணி பெண்கள் காண்பார்கள். இதற்கு காரணம் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் தான். திடீர் அலெர்ஜி: கர்ப்பிணிகளுக்கு ஒவ்வாமை என்பது பொதுவாக உண்டாகும் ஒரு பிரச்சனையாக குறிப்பாக தூசு, புகை, மகரந்த பூஞ்சைகளினால் இந்த பிரச்சனை ஏற்படக்கூடும். அதனால் சுகாதாரமான இடத்தில் நீங்கள் இருப்பதோடு முகத்திற்கு மாஸ்க் அணிவது மிக நல்லது. பசியின்மை: கர்ப்ப காலத்தில் பசியின்மை காணக்கூடும். இதற்கு காரணம் நீங்கள் உண்ணும் உணவு உங்களுக்கு மட்டுமே சென்று சேராமல் உங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் சென்று சேர்வதாலே. இதனால் உங்கள் குழந்தைக்கு தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களும் கிடைக்க பெறுகிறது. அதனால் நீங்கள் சத்தான உணவை அளவோடு சாப்பிட வேண்டியது மிக மிக அவசியம். குறட்டை பழக்கம்: ஹார்மோன் மாற்றங்களால் உங்களிடம் மூக்கடைப்பு காணப்பட, இதனால் குறட்டை பழக்கமும் ஏற்படக்கூடும்.

பதினேழு வாரங்களில் உங்கள் உடலில் காணப்படும் மாற்றங்கள்

சரியான உணவு: இந்த சமயங்களில் சரியான நேரத்தில் சரியான உணவை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். இதனால், ஏற்படவிருக்கும் பசியின்மையை உங்களால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இயலும். குறட்டை மற்றும் கனவு: கர்ப்பிணிகள் திடீரென ஒரு வித பயந்த சுபாவத்துடன் இருப்பதை நாம் பார்த்திருப்போம். இதற்கு முக்கிய காரணம், கர்ப்ப காலத்தில் காணப்படும் ஒரு வித ஹார்மோன் மாற்றங்களே ஆகும். அதேபோல் மூக்கடைப்பு பிரச்சனையால் குறட்டை பழக்கமும் உங்களை தொற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. அலெர்ஜி: கர்ப்பிணி பெண்களுக்கு காணப்படும் குமட்டல் மற்றும் வாந்தி என்பது இயல்பான பிரச்சனைகள் என்றாலும் இவற்றை கட்டுப்படுத்த நல்ல சுகாதாரமான சூழலை உங்களை சுற்றி நீங்கள் அமைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

பதினேழு வாரங்களில் நீங்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்

பதினேழு வாரங்களில் நீங்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சி எது என்பதை இப்போது காணொளி மூலம் நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

பதினேழு வாரங்களில் நீங்கள் உண்ண வேண்டிய உணவுகள்

பதினேழு வார கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியத்தை தர வல்ல பாலக் சூப் செய்வது எப்படி என்பதை இப்போது காணொளி மூலம் நாம் காணலாம்.

×